தமிழகத்தில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள இந்த குரூப் 4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு என்பதால், அதிகமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (www.tnpsc.gov.in) இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவுக்குள் வருகின்றன.
கடந்த 2017-ஆம் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் குரூப் 4 பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, குரூப் 4 பிரிவில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த தேர்வு அறிவிக்கையின் போது, 9 ஆயிரத்து 351 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த எழுத்துத் தேர்வினை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த நிலையில், குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.
காலிப்பணியிடம் மற்றும் தகுதி விபரம் தெரிந்து கொள்ள:-
http://www.tnpsc.gov.in/2019_19_ccse4-notfn-tamil.pdf
ஜீன் 14 முதல் விண்ணப்பிக்கலாம்:
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட தேர்வு அறிவிக்கையின்படி, எழுத்துத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற குறிப்பிட்ட சில பணியிடங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், . 6,491 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் இன்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு விவரங்கள் வெளியீடு:
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வுக் கால அட்டவணை, தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய விரிவான அறிவிக்கை வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.