கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் ராஜினாமாபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டினத்தில் கடந்த 16/03/2019 சனிக்கிழமை அன்று ஊர் பொது மக்கள் ஒன்று கூடி இரண்டு ஜமாத்தை ஒன்றினைக்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் இரண்டு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 21/6/2019 வெள்ளிக்கிழமை அன்று ஜனாப் ASM.செய்யது முஹமது அவர்கள் தலைமையிலான நிர்வாகம் மற்றும் மதரசா கமிட்டி கலைக்கப்பட்டதாக ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஜனாப் ASM.செய்யது முஹமது அவர்கள் அறிவித்தார்கள். மேலும் அவர் தெரிவிக்கையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கும்படி வேண்டுகோளையும் விடுத்தார்.  இது ஒரு மனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்டது.

மேலும் வெளிப்பள்ளியில் எப்பொழுதும் போன்று நிர்வாகம் ஒன்று கூடி வரவு செலவு சம்மந்தமான கணக்குகள் வாசிக்கப்பட்டது. பிறகு ஜனாப், SRM.சேக்பரிது அவர்கள் நிர்வாகம் கலைக்கப்பட்டுவிட்டது என்றும் அடுத்தகட்ட பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும்

1. ராஜினாமா செய்த நிர்வாகமே புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் வரை காவந்து நிர்வாகமாக தொடர்ந்து செயல்படுவது.
2. புதிதாக ஒரு கமிட்டி அமைத்து அவர்கள் தலைமையில் செயல்படுவது என இரண்டு முறைகள் வழக்கத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அதற்க்கு அந்த சபையில் ராஜினாமா செய்த நிர்வாகமே புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் வரை காவந்து நிர்வாகமாக தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் முன்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதின் அடிப்படையில் வரும் 28/6/2019 வெள்ளிக்கிழமை  அன்று புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே இறுதி நேரத்தில் ஜனாப். SRM.சாவன்னா அவர்கள்,  இஜ்திமா கணக்கை ஒப்படைக்காதவரை புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறியிருப்பது பொது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.(49:10)

இஜ்திமா கணக்கு பற்றி GPM மீடியா குழுமம் மூலம் விசாரணை மேற்கொண்டதில் ஊரின் மண்ணின் மைந்தர் ஒருவர் கூறும் பொழுது, இஜ்திமா கணக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னறே பள்ளிவாசல் வளாகத்தில் ஊர் சபை கூடி பொதுமக்கள் முன்னிலையில் ஒப்படைக்கபட்டுவிட்டது என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கு சம்மந்தமான நகல்கள் பொதுத்தளங்களிலும் (Whatsapp) பகிரப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் புதிதாக பதவி ஏற்கும் நிர்வாகத்திடம் மீதம் உள்ள தொகை அனைத்தும் ஒப்படைக்கப்படும் என்று கூறினர். மேலும் கணக்கு வரவு செலவு நகலையும் அவர் எங்களுக்கு தந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனாப். OSM முஹமது அலி ஜின்னா அவர்களின் தலைமையில் இருந்த நிர்வாகம் மற்றும் வர்த்தக சங்கத்தின் ஆலோசனையின் அடிப்படையில் ஜனாப். OSM முஹமது அலி ஜின்னா மற்றும் ஜனாப். RM.கலிபா சாகிப், (அப்போதைய செயலாளர், அல்வின்னர் வர்த்தக சங்கம்) ஆகிய இருவரின் பெயரில் ஏம்பக்கோட்டையில் உள்ள புதுக்கோட்டை கூட்டுறவு வங்கியில் (The Pudukkottai District Central Cooperative Bank) இணைப்பு கணக்கு (Joint Account) துவங்கப்பட்டு   வரவு செலவு செய்யப்பட்டது. இஜ்திமா செலவு போக மீதம் இருந்த தொகை ரூ.429,401 கணக்கிலேயே வைப்புத் தொகையாக உள்ளது.

குறிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வங்கிக்கணக்கில் எந்த வித வரவு,செலவு செய்யாவிட்டால் தங்கள் கணக்கு முடக்கப்படும். அதனடிப்படையில் தற்போது அந்த இணைப்பு கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

மேலும்  அனைத்து சட்ட ரீதியான  சிக்கல்களையும் சரி செய்யப்பட்டு வங்கியில் உள்ள பணத்தை எடுத்து புதிய ஜமாத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சம்பந்தபட்டவர்கள் கூறினார்கள்.

பொது மக்களின் கருத்து:

பொதுவான   நபர்களை கொண்ட ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு அவர்களிடம் இரு தரப்பினரும் கணக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் பின்னர் அந்த கமிட்டியே இதுவரை பதவியில் இல்லாத அனைத்து திசைகளில் இருந்து (நடுத்தெரு, அவுலியநகர், கடற்கரை, பழையகாலணி, VIP நகர்) ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய நபர்களை புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட  வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இதன் அடிப்படையில் தேர்வு செய்தல் அனைத்து பிரச்சனைகளும் சுமூக தீர்வு ஏற்படும் என்பது மக்களின் மனநிலையாக உள்ளது.

நீதியான அரசன்:
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58

கமிட்டி உருவாக்கப்படுமா?

புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்படுமா?


பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

0 Comments