கோபாலப்பட்டினம் VIP நகரில் பூட்டியிருந்த மூன்று வீடுகளில் கதவை உடைத்து 1 பவுன் நகை, ரூ. 51,000 பணம் திருட்டுபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினம் VIP நகரில் 13/06/2019 வியாழக்கிழமை இரவு தொடர்ந்து மூன்று வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.


இந்தநிலையில் 14/06/2019 காலை மூன்று வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தகவல் கொடுக்கப்பட்டு மூன்று வீடுகளில் உள்ள கைரேகையை சேகரித்து சென்றனர்.

அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது. ஒரு வீட்டில் 1/2 பவுன் நகை மற்றும் ரூ.50,000 பணம் கொள்ளை போயிருக்கிறது. மற்றொரு வீட்டில் 1/4 பவுன் நகை மற்றும் 1000 ரூபாய் பணம் கொள்ளை போயிருக்கிறது. இன்னொரு வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த அலிமார், பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments