புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக நடப்பு நிதியாண்டில் 824 பண்ணைக் குட்டைகள் ரூ.8 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட உள்ளன.
மழை பெய்யும்போது நிலத்தில் வழிந்தோடுகிற மழைநீரை சேகரித்து வைத்து, பயிர்கள் பாசன நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும்போது பயிர்களுக்கு தக்க நேரத்தில் உயிர்ப்பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பண்ணைக் குட்டைகள் பயன்படுகிறது. இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது. பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமைப்பாகவும் விளங்குவதை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மற்றும் கடலோர மாவட்டமான புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில் 824 பண்ணைக் குட்டைகள் அமைக்க அரசாணை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை சுமார் 250 விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் வருகிற 25-ந் தேதிக்குள் புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம், திருக்கோகர்ணம் உதவி செயற்பொறியாளர், அறந்தாங்கி ராஜேந்திரபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.