செவித்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசுப் பள்ளியில் சேர்க்கை தொடக்கம்



புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் பின்புறம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தச் சிறப்புப் பள்ளியில் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் கூடிய சிறப்புக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. 

இங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், உணவு, விடுதி வசதி மற்றும் கல்வி உபகரணங்களுடன் காதொலிக் கருவி வழங்கப்பட்டு நவீன தொழில்நுட்ப வகுப்பறை மூலம் சிறப்புக் கல்வி போதிக்கப்படுகிறது. நிகழாண்டுக்கான 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு சிறப்புப் பள்ளி தொலைபேசி எண்  04322 226337  மற்றும் தலைமை ஆசிரியரின் செல்லிடப்பேசி எண்  94420 13070  ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments