புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 100 சதவீத அரசு மானியத்தில் புதிய பண்ணைக் குட்டைகள் அமைக்க கால அவகாசம் நீடிப்பு



100 சதவீத அரசு மானியத்தில் புதிய பண்ணைக்குட்டைகள் அமைக்க கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

100 சதவீத அரசு மானியத்தில் புதிய பண்ணைக்குட்டைகள் அமைக்க
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம்
நடப்பு 2019-20 நிதியாண்டில் 824 புதிய பண்ணைக்குட்டைகள் ரூ.8.24 கோடி
மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 450 விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

பண்ணைக்குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்ற அமைப்பாகவும் விளங்குவதை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மற்றும் கடலோர மாவட்டமான புதுக்கோட்டை பகுதி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும்பொருட்டு விருப்பமுள்ள விவசாயிகள் உடனடியாக ஜீலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த விபரங்களை அறிய செயற் பொறியாளர் (வேளாண் பொறியியல்) அலுவலகத்தின் 04322-221816 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை அலுவலகத்தின் 9443264168, 9976127540 என்ற கைபேசி எண்களிலோ மற்றும் உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, ராஜேந்திரபுரம், பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி அலுவலகத்தின் 9442178763, 9443456682 என்ற கைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments