ஒரு ஃபேன், இரண்டு லைட்டுகள் உள்ள வீட்டிற்கு ரூ.128 கோடி கரண்ட் பில்! மலைத்துப் போன முதியவர்ஃபேன் மற்றும் லைட் மட்டுமே மின்சார பொருளாக இருக்கும் வீட்டுக்கு, சுமார் ரூ.128 கோடியை மின்சார கட்டணம் செலுத்தும்படி பில் வந்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் ஷமிம் என்ற முதியவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு 128,45,95,444 ரூபாயை மின்சார கட்டணமாக செலுத்துமாறு பில் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதியவர் ஷமிம் கூறுகையில், மின்சார பில்லில் பிழை இருப்பதாகவும், அதனை சரி செய்ய மின்சாரத் துறையை அணுகியதாகவும், ஆனால், பில்லில் இருக்கும் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

“எங்கள் கோரிக்கைக்கு யாரும் செவிசாய்ப்பதில்லை, அவ்வளவு பெரிய தொகையை நாங்கள் எப்படி கொடுப்போம்?. வீட்டில் ஃபேன் மற்றும் லைட் தவிர எதுவும் பயன்படுத்தப்படுவது இல்லை.கட்டணம் செலுத்த தவறிய நிலையில், வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என எங்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்று ஷமிம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், இது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கும். பாதிக்கப்பட்டவர் பில்லுடன் நேரில் வந்தால் சரி செய்து கொடுப்போம் என்று கூறியுள்ளனர். 

Post a Comment

0 Comments