புதுக்கோட்டையி்ல் 26/07/2019 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்புதுக்கோட்டையில் நாளை மறுதினம் (26ம்தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை  கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 26/07/2019 புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி வரை கல்வி தகுதி உடைய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

இதில் வேலைவாய்ப்பு பெறுவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

 தங்களது பயோடேட்டா, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments