ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதுக்குடியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இம்ரான்கான் என்ற கச்சி மரிக்கா (வயது 32) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன்பின்னர் ஜாமீனில் வந்த இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார். இது குறித்து மே 26–ந்தேதி அவரது சகோதரர் வாசிப் மரைக்காயர் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதனிடையே கஞ்சா விற்று வந்த சாகுல்ஹமீது என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், 5 பேருடன் சேர்ந்து இம்ரான்கானை கொலை செய்ததாகவும், சடலத்தை கீழக்கரை கப்பலடி கடற்கரை ஓரத்தில் புதைத்து விட்டதாகவும் சாகுல்ஹமீது போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கீழக்கரை தாசில்தார் பபிதா சிக்கந்தர் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை கடல் பகுதியில் இம்ரான்கானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. பின்பு அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடந்தது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு கடற்கரை ஓரமாக புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி: தினத்தந்தி

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.