மீமிசலில் ஒழிந்தது மூன்று எண் லாட்டரி வியாபாரம்! - மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் மூன்று நம்பர் லாட்டரி அமோகமாக விற்பனையாகி வந்தது. இதனால் அப்பாவி ஏழை கூலி தொழிலாளர் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மூன்று நம்பர் லாட்டரி சீட்டு ரூ.30 மற்றும் ரூ.60-க்கு விற்பனையானது. ஒரு தனிநபர் ரூ.30 மற்றும் ரூ.60 முதல் ஆயிரக்கணக்கில் லாட்டரி சீட்டு வாங்கினர்.  இதில், மூன்று நம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் நபர் தேர்வு செய்த நம்பரில் முதல் 3 நம்பர் இருந்தால் அதற்கு 26 ஆயிரமும், இரண்டு நம்பர் இருந்தால் அதற்கு 13 ஆயிரமும், ஒரு நம்பர் இருந்தால் அதற்கு 2 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படுவதால், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதனால், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பலர் தங்களது ஒட்டு மொத்த வருமானத்தினை இழந்து தவித்தனர். விட்ட தொகையை மீண்டும் எடுத்து விடலாம் என எண்ணி தினமும் பல நூற்றுக்கணக்கான ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கி பரிசு கிடைக்காமல் பல குடும்பங்கள் கடன் சுமைக்கு தள்ளப்பட்டன. எனவே மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை மீமிசல் போலீஸார் கண்காணிப்பு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்து வந்தது.


எனவே மீமிசல் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கேரளா லாட்டரியை மீமிசல் பகுதியில் ஒளித்துகட்டிய கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளராகவும் மீமிசல் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளராகவும் பணியாற்றி கொண்டிருக்கும் உயர்திரு.முத்துக்குமார் தலைமையிலான போலீஸாருக்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments