சாலையில் கண்டெடுத்த 2500 ரூபாயை போலீஸில் ஒப்படைத்த பேரையூர் சிறுமி ஜீனத் ராபியா!! மாணவிக்கு பாராட்டு!!!மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவி ஜீனத் ராபியா அங்கு உள்ள தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் .
இம்மாணவி சாலையோரம் கிடந்த ரூபாய் 2500 பணத்தை எடுத்து பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் கொடுத்து சாலையில் கண்டெடுத்த விவரத்தை கூறினார். பின்னர் ஆசிரியரின் துணையுடன் மாணவி ஜீனத் ராபியா பேரையூர் காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதனைக் கண்ட பேரையூர் காவல் நிலைய போலீசார் மாணவியின் நேர்மையை கண்டு வெகுவாக பாராட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் சிறுமியின் நேர்மையை பாராட்டி தாயாரின் முன்னிலையில் அவருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி ஊக்குவித்தார்.

Source:
  

Post a Comment

0 Comments