புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 678 பேருக்கு பல்வேறு சிகிச்சைகள்!!! கலெக்டர் தகவல்முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 1,027 நோய் சிகிச்சைகளும், 154 தொடர் சிகிச்சைகளும், 38 வகையான நோய் கண்டறிதல் பரிசோதனைகளும், 8 வகையான உயர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் என பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஏராளமான பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 9 அரசு மருத்துவமனைகளில் 10 ஆயிரத்து 195 பேருக்கு ரூ.13 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டிலும், 8 தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 441 பேருக்கு ரூ.7 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டிலும், 7 நோய் கண்டறிதல் மையங்களில் 16 ஆயிரத்து 42 பேருக்கு ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் நோய் கண்டறிதல் பரிசோதனைகளும் என பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 678 பேருக்கு ரூ.23 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தி வரும் இதுபோன்ற மருத்துவ திட்டங்களை பொது மக்கள் உரியமுறையில் பெற்று பயனடைய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments