புதுக்கோட்டையில் பெண்களுக்கு 30 நாள் இலவச அழகுக் கலைப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்



இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில் 30 நாள்களுக்கு அழகுக்கலை பயிற்சி  அளிக்கப்படவுள்ளதாக   பயிற்சி நிலையத்தின் இயக்குநர் ஆர். சரண்யா அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுய தொழில் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன்  பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தற்போது அழகுக்கலைப் பயிற்சி 30 நாட்கள்  இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் சேர விரும்பும் 18 முதல் 40 வயது வரையுள்ள, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புறப் பெண்கள்  3 புகைப்படங்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 1506/2, மேல நான்காம்  வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை- 622 001. மேலும் விவரங்களுக்கு 04322- 225 339, 70109 57772.

Post a Comment

0 Comments