புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3வது புதன் கிழமை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் நடைமுறையின் ஒரு அங்கமாக மாற்றுதிறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.

மேலும் இந்த நடைமுறையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
ஒவ்வொரு வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமை அன்று மாற்றுதிறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டம் வருவாய் கோட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும். மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு கண்டுகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments