புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வரும்
விவசாயிகள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வங்கிகள்
மூலம் கிசான் கிரெடிட் கார்டுகள் (உழவர் கடன் அட்டைகள்) வழங்கப்பட்டு
வருகின்றது. இந்த கடன் அட்டை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்
மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

உழவர் கடன் அட்டைகளை விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கும்,
கால்நடை வளர்ப்பிற்கும், மீன் வளர்ப்பிற்கும் பெற்றுக்கொள்ளலாம். பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து, நடைமுறை மூலதனத்தின் அளவுக்கேற்ப கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1.60 லட்சம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் 7 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும் உரிய காலத்திற்குள் கடன் தொகையை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டித்தொகை சலுகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், 4 சதவீதம் வட்டி மட்டுமே செலுத்தினால் போதுமானது.

கிசான் கடன் அட்டை பெற உரிய விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை,
நிலஉரிமை ஆதாரம் மற்றும் வங்கி சேமிப்புகணக்கு முதல் பக்க நகல்
ஆகியவற்றை கொடுத்து இரண்டு வார காலத்திற்குள் கிசான் கடன் அட்டை
பெற்றுக்கொள்ளலாம். கிசான் கடன் அட்டை 5 வருடம் வரை செல்லத்தக்கது
எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் கடன் அட்டை பெற்று
இடுபொருட்கள் தேவையினைப் பூர்த்தி செய்து உற்பத்தியைப் பெருக்கலாம்.

எனவே உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பத்துடன் அருகில் உள்ள
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தகம், நில ஆவணங்கள் போன்ற உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கடன் அட்டையை பெற்று பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments