நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல். கோபாலப்பட்டினம் என்ன விதி விலக்கா? உங்களது ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்கப்போகிறோம். அந்த கார்டின் நம்பரை சொல்லுங்கள்...
கோபாலபட்டிணம் மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போலியான அழைப்புகள் வந்த வண்ணமிருக்கிறது.
எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை நகர மக்களிடம் அவர்களது வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிக அளவில் நடக் கிறது. இதில் குறிப்பிட்ட 2 வங்கிகளின் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தான் அதிக அளவில் பணத்தை பறிகொடுக்கிறார்கள்.
இதுபோல கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில், பொதுமக்களிடம் செல்போனில் பேசுகிறார்கள். குறிப்பிட்ட வங்கியின் பெயரைச் சொல்லி அந்த வங்கியின் மேலாளர் தலைமை அலுவலகத்திலிருந்து பேசுவதாக சொல்வார்கள்.
உங்களது ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்கப்போகிறோம். அந்த கார்டின் நம்பரை சொல்லுங்கள் என்று முதலில் கேட்பார்கள். அடுத்தகட்டமாக ஓ.டி.பி. நம்பரை கேட்பார்கள். ஓ.டி.பி. நம்பரைச் சொன்னவுடன் அடுத்தகட்டமாக உங்கள் வங்கி சேமிப்புக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். அந்த பணத்திற்கு பொருட்களை வாங்கி விடுவார்கள்.
செல்போனிலேயே பேசி நூதனமான முறையில் இதுபோன்ற பகல் கொள்ளையை அரங்கேற்றுகிறார்கள். இதுபோல், பணத்தை இழக்கும் பொதுமக்களின் புகார்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தினமும் குவிந்த வண்ணம் உள்ளன.
தினமும் 6 அல்லது 7 புகார்கள் வருவதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் போலீஸ் சூப்பிரண்டு ஒருவரது வங்கிக்கணக்கில் இருந்து இதுபோல் பணத்தை சுருட்டிவிட்டனர்.
இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் வடமாநில கும்பல் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியை தலைமையிடமாக வைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது.
இவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீசார் கொள்ளையர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தனிப்படை போலீசாரை உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பிவைத்து அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கி அதிகாரிகள் போல செல்போனில் பேசி ஏ.டி.எம். கார்டு நம்பரை கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று பொதுமக்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஓ.டி.பி. நம்பரை கேட்டால் எக்காரணத்தைக் கொண்டும் கொடுத்து ஏமாறவேண்டாம் என்றும் போலீசார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.