புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுமிகளின் வீரதீரச் செயல்களுக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம்பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு சாதனை மற்றும் வீரதீரச் செயல் புரிந்த, 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு, சாதனை புரிந்த 5 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24இல் மாநில அரசின்
விருது, ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியன வழங்கப்படுகின்றன.

இந்த விருது பெற பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தைத் திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான - தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல் வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments