மீமிசலில் மகளிருக்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் வருகின்ற 13/07/2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை மதியம் 2.00 மணி வரை மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
மா.மலர் மருத்துவமனை -  புதுக்கோட்டை, கிங்ஸ் ரோட்டரி சங்கம் - மீமிசல் மற்றும் சிட்டி ரோட்டரி சங்கம் - புதுக்கோட்டை இணைந்து நடத்தும் மகளிருக்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. அதுசமயம் இந்த மருத்துவ முகாமில் தலைசிறந்த மருத்துவர் வருகை தந்து இலவசமாக மருத்துவம் பார்க்க இருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் தலைமை Rtn J. முகம்மது யூசுப் தலைவர் கிங்ஸ் ரோட்டரி சங்கம், மீமிசல், முன்னிலை Rtn.G. தனகோபால் தலைவர் - சிட்டி ரோட்டரி சங்கம்-புதுக்கோட்டை, Rtn.S. அன்பரசன், செயலாளர் ,கிங்ஸ் ரோட்டரி சங்கம்-மீமிசல், வரவேற்றல் பொன். ஆறுமுகம் Ex. ஊராட்சி மன்ற தலைவர் செய்யானம், சிறப்பு விருந்தினர் Rtn. A. கராத்தே கண்ணையன்
துணை ஆளுநர் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

மருத்துவ முகாம் சிறப்பு மருத்துவர்

Dr.M. தில்லை மலர் M.S.,OG  (மகளிர் நலம் மற்றும் செயற்கை கருவூட்டல் சிறப்பு மருத்துவர்)

தேவைப்படும் நபர்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும்.

இந்த மகளிருக்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமில்  அனைத்து பெண்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* திருமணம் முடிந்து நீண்ட நாட்களாக குழந்தைபேறு இல்லாத தம்பதியினர்.

* கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள்.

* கர்ப்பப்பையில் குறைபாடு உள்ளவர்கள்.

* சினைப்பையில் நீர்க் கட்டி (PCOD) பிரச்சினை உள்ளவர்கள்

* ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள்

* பலமுறை IUI செய்தும் பலன் இல்லாதவர்கள் IVF, ICSI  முறைகள் மேற்கொண்டு  பயன் அடையலாம்.

* கர்ப்பப்பை, முட்டைபை சம்பந்தமான குறைபாடு உள்ளவர்களும்.

* மகளிரின் அனைத்து விதமான நோய்களுக்கு இலவச சிறப்பு ஆலோசனை வழங்கப்படும்.

கீழ்கண்ட காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


  • தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டம் 
  • பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் 
  • தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் வென்சர் பென்சனர் மருத்துவ காப்பிட்டு திட்டம்
  • STAR HEALTH இன்சூரன்ஸ், 
  • VIDAL HEALTH இன்சூரன்ஸ்
  • FHPL மருத்துவத் திட்டம் மற்றும் இதர தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்

மா. மலர் செயற்கை கருத்தரிப்பு மையம் /டெஸ்ட் டியூப் பேபி சென்டர்
மா. மலர் மருத்துவமனை
T.S.No.5590, 91,92 /2,
தெற்கு 4ம் வீதி, புதுக்கோட்டை
போன் : 04322 - 223941 224941

Post a Comment

0 Comments