புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்



புதுக்கோட்டை மாவட்ட அளவில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: அனைத்து அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தனித்தனியே தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படவுள்ளன.

வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் நிலைக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம் நிலைக்கு ரூ.7 ஆயிரம், மூன்றாம் நிலைக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

போட்டிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் வரும் 09/08/2019 காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளன. மூன்று போட்டிகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

  • போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள படிவத்தை நிறைவு செய்து கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன் போட்டி நடைபெறும் இடத்தில் அளிக்க வேண்டும். 
  • படிவம் இன்றி வெறும் பரிந்துரையுடன் வரும் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே ஒரு கல்லூரியிலிருந்து அனுப்பி வைக்க வேண்டும். 
  • ஒரு மாணவர் கண்டிப்பாக ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
  • இதற்கு முன் இப்போட்டிகளில் பங்கேற்று 2 முறை பரிசு பெற்றிருப்பின் மீண்டும் அதே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • போட்டிகளுக்கான தலைப்புகள் நடுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் முன்னிலையில் போட்டி நடைபெறும் நேரத் தொடக்கத்தில் அறிவிக்கப்படும்.
  • போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படாது. 
  • முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்குபெறலாம்.

மேலும் விவரங்களுக்கு :-
புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
புதுக்கோட்டை .
என்ற முகவரியில் நேரடியாகவோ, 04322 228840 அல்லது 99522 80798 ஆகிய எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments