புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரப்பெறும் புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்ய குறைதீர்க்கும் குழு..மாவட்ட கலெக்டர் தகவல்!புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது
வரப்பெறும் புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்ய குறைதீர்க்கும் குழு
அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரப்பெறும் புகார் மனுக்கள் பெற்று விசாரணை செய்ய ஏதுவாக, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒரு குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் துணை ஆட்சியர் நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) தலைவராகவும், அலுவலக மேலாளர்(பொது), மற்றும் அலுவலக மேலாளர் (நீதியியல்) ஆகிய இரண்டு வட்டாட்சியர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 எனவே பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏதேனும் புகார்
தெரிவிக்க வேண்டி இருப்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கிராம நிர்வாக குறைதீர்க்கும் குழு,  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற கிராம நிர்வாக குறைதீர்க்கும் குழுவிற்கு மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments