முத்தலாக் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின. 11 எம்.பி.க்களைக் கொண்டுள்ள அதிமுக எதிர்த்து கருத்துத் தெரிவித்தது. ஆனால் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.
இந்நிலையில் 99-84 என்ற வாக்கு கணக்கில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இது அரசமைப்புச் சட்டத்துக்கு, அது வழங்குகிற உரிமைகளுக்கு கருப்பு நாள் என்கிறார். சாயிரா பானு வழக்கில் ஏற்கெனவே முத்தலாக் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், முத்தலாக் சொன்னாலும் அது திருமண முறிவுக்கு வழிவகுக்காது என்ற நிலையில், இதனை உரிமையியல் பிரச்சனையாக இருந்து குற்றவியல் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார்கள். இந்த மசோதா நிறைவேறியதால், முத்தலாக் சொல்லும் கணவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்கிறார் அவர்.
"அப்படி சிறையில் இருக்கிற கணவன் எப்படி அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க முடியும்?
இந்த முத்தலாக் முறை தவறு, இதனை இஸ்லாம் ஏற்கவில்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த சட்டம் முஸ்லிம்களை, குறிப்பாக முஸ்லிம் ஆண்களை பழிவாங்கும் நோக்கத்தோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் கணவனால் கைவிடப்பட்ட 23.7 லட்சம் பெண்கள் இருக்கிறார்கள் இவர்களில் 0.8 சதவீதம் பேர்தான் முஸ்லிம்கள். இந்த கைவிடப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் இந்துப் பெண்கள்தான்" என்றார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.