குமரப்பன்வயலில் சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!அறந்தாங்கி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 65 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள குமரப்பன் வயலை சேர்ந்த சேர்ந்தவர் நாகன் (65). இவர் வீட்டருகே உள்ள 9-ஆம் வகுப்பு வரை படித்து வீட்டிலிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். வலி ஏற்பட்டதை தொடர்ந்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாகி உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது நாகன் தன்னை மிரட்டி கற்பழித்ததாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments