பள்ளிப் பேருந்துக்குள் பாம்பு - மாணவர்கள் அதிர்ச்சி



ஆரணியில் தனியார் பள்ளிப் பேருந்தில் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணமங்கலம் அருகே டூலிப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்பேருந்து புறப்பட்டபோது ஓட்டுனர் இருக்கை அருகிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.

அதனைக் கண்ட மாணவர்கள் அலறியுள்ளனர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு பேருந்திற்குள் இருந்த சுமார் 8 அடி சாரைப் பாம்பை பிடித்தனர்.

ஆரணி டூலிப் பள்ளி வளாகத்தில் புறா, முயல், வாத்து, கோழி, முயல் உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை பிடிக்க வந்த பாம்பு பேருந்தின் உள்ளே புகுந்து பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments