பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா! வனக்காவலர் ஆக வாய்ப்பு!



தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 பணிகள்:

வனக்காவலர்

மொத்தம் = 564 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பு நாள்: 07.03.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 20/07/2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10/08/2019

ஆன்லைன் வழியில் தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 10/08/2019, மாலை 05.00 மணி

இந்தியன் வங்கி மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 12/08/2019, மதியம் 02.00 மணி

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 12/08/2019

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)

1. பொது பிரிவினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

2. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் போன்றோராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

3. முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் (இராணுவப்பணி கழித்தது போக) இருத்தல் வேண்டும்.

ஊதியம்: 

குறைந்தபட்சமாக ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.52,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.150

குறிப்பு:

ஆன்லைன் மூலமும், இந்தியன் வங்கியின் சல்லான் மூலமும் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.

கல்வித்தகுதி:

வனக்காவலர் பணிக்கு, குறைந்தபட்ச பொதுக் கல்வித்தகுதி அதாவது பத்தாம் வகுப்பு அல்லது அதற்கிணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக்கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் தமிழ்நாடு வனத்துறையின் இணையதளமான,
https://www.forests.tn.gov.in/ மற்றும் https://tnfusrc.in/drfwmay19/ - போன்ற இணையதள முகவரிகளில் ஏதேனும் ஒன்றில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:

1. ஆன்லைன் வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. உடற்திறன் தேர்வு

குறிப்பு: 

ஆன்லைன் வழித்தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களைப் பெற,
https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Press%20Release-Watcher_Tamil.pdf மற்றும் https://tnfusrc.in/drfwmay19/uploads/loadpdf.php?file=k7m5p+fQk8y6wOLgwuKWo5jWzst9tN/FppyXow==&t=0rjFodnKx8m8w9rhj9nJ0A==#toolbar=0&navpanes=0 - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments