புதுக்கோட்டையில் நாளை 09/08/2019 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஆக. 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பல்வேறு தனியார் துறை  நிறுவனங்கள்  இந்த முகாமில் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதிவாய்ந்த நபர்களை கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே இந்த முகாமில் , புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை முடித்த வேலை வாய்ப்பில்லாதவர்கள் தவறாது பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments