பஸ் படிக்கட்டில் தொங்குவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் - முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை



மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்குவதை தவிர்க்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசுகையில், மாணவர்கள் பள்ளியின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சிபெற வேண்டும். மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments