புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நாளை குடற்புழு நீக்க மருந்துகள் விநியோகம்: மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு



அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 08.08.2019 நாளை குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.

1 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின்
ஆரோக்கியத்தினை மேம்படுத்திடும் வகையில், குடற்புழு நீக்கிட 08.08.2019
நாளை தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது.
குடற்புழுக்கள் சிறு குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வினை மிகவும்
பாதிப்புள்ளாக்குகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி
இந்தியாவில் புழுத்தொற்று பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகமிருப்பதால், சுமார்
64% குழந்தைகளுக்கு புழுத்தொற்று நீக்கிட சிகிச்சை தேவைப்படுகிறது.
கொக்கிப்புழு, உருண்டைப்புழு ஆகியவை அசுத்தமாக உள்ள சுற்றுப்புற
சூழ்நிலைகள் மூலமாகப் பரவுகிறது. அதிகமான புழுத்தொற்று இருப்பின்,
வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, பசியின்மை, சோர்வு போன்றவை ஏற்படும். 

சிறுவர்கள் அடிக்கடி உடல் நலப்பாதிக்கப்படுவது, படிப்பில்
கவனமின்மை ஆகியவை புழுத்தொற்றின் அறிகுறிகள், இதற்கான
சிகிச்சையாக அல்பெண்டசோல் மாத்திரை 400 மி.கி அல்லது சிரப் 400
மி.கி/10 மி.லி வழங்கப்படுகிறது. 1 வயது முதல் 2 வயது வரை 200 மி.கி
(அல்லது) 5 மி.லி சிரப், 2-19 வயது வரை 400 மி.கி ( ஒரு முழு மாத்திரை)
என்ற அளவில் மருந்துகள் வழங்கப்படுகிறது. 

உணவு உண்ணும் முன்பும் கழிவறை சென்று வந்த பின்பும் கைகளை
சுத்தமாக கழுவுதல், சுகாதார கழிவறை பயன்படுத்துதல், காலில் செருப்பு
அணிதல், பாதுகாப்பான குடிநீர், நன்கு சமைக்கப்பட்ட உணவு, கைவிரல்
நகங்களை வெட்டி தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், காய்கறி மற்றும்
பழங்களை நன்கு கழுவிய பின்னர் பயன்படுத்துதல் ஆகிய முறைகள் மூலம்
புழுத்தொற்று அபாயத்தினைத் தவிர்க்கலாம். 

08.08.2019 நாளை அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும்
மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்
மூலம் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது. 08.08.2019
வழங்கப்படாத குழந்தைகளுக்கு 16.08.2019 அன்று மாத்திரை வழங்கப்படும். 

08.08.2019 நாளை நடைபெற உள்ள தேசிய குடற்புழு நீக்க மருந்து
வழங்கும் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்டு அனைத்து
குழந்தைகளுக்கும் மாத்திரையினை வழங்கி, குழந்தைகளின் ஆரோக்கிய
வாழ்வினை உறுதி செய்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்

Post a Comment

0 Comments