புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ''சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது'' பெற விண்ணப்பிக்கலாம்சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.

ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு
செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' தமிழக அரசால்
வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ. 1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும்,
தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிது.

 2019-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார்
விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் 10.10.2019-க்குள் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments