புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள மசால்ஜி காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள மசால்ஜி காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள மசால்ஜி காலிப்பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து (22.08.2019) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மசால்ஜி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 09 

இனசுழற்சி விபரம் பின்வருமாறு:

  1. பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்-1,
  2. ஆதிதிராவிடர் அருந்ததியினர்(பெண்) முன்னுரிமை பெற்றவர்(ஆதரவற்ற விதவை)-1,
  3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமை பெற்றவர்-1, 
  4. பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமை பெற்றவர்-1, 
  5. பொதுப்போட்டி(பெண்) முன்னுரிமை அற்றவர்(ஆதரவற்ற விதவை)-1,
  6. ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர்-1,
  7. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்(பெண்) முன்னுரிமையற்றவர் (ஆதரவற்ற விதவை)-1,
  8. பிற்படுத்தப்பட்டோர்(பெண்) முன்னுரிமையற்றவர்(ஆதரவற்ற விதவை)-1, 
  9. பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர்-1 

வயது வரம்பு:

  •  மேலும் 01.07.2019 அன்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 35 வயதிற்குள்ளும், 
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்குள்ளும், 
  • இதர பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 
  • குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:
தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விகிதம்:
ரூ.15,700-50,000

(Level-1) நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தங்கள் விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதி புகைப்படத்துடன் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகிய விபரங்களுடன் எந்த இனசுழற்சிக்கு விண்ணப்பம் செய்கிறார் என்பதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இதற்கென விண்ணப்பப்படிவம் ஏதும் தனியாக வழங்கப்படமாட்டாது.

 விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும்
முன்னுரிமைக்கான நகலினையும் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

விண்ணப்பங்களை 22.08.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை- 622 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அஞ்சலக தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. நேர்காணல் அழைப்புக் கடிதம் பெறுவது மட்டும் வேலைக்கான உத்தரவு என்று கருதக்கூடாது. நேர்காணல் அழைப்பு தகுதியான
விண்ணப்பதாரருக்கு தனியே அனுப்பப்படும். நேர்காணலுக்குரிய நாள், நேரம்
மாறுதலுக்குட்பட்டது. நேர்காணலுக்கு வரும் நபர்களுக்கு பயணப்படி ஏதும்
வழங்கப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/08/2019080731.pdf

Post a Comment

0 Comments