நாடு முழுவதும் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்த ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது என்று இந்திய மிக முக்கிய ஆளுமைகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுப்பியிருந்தனர்.
பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த நாள் முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுபான்மையினர்கள், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பரவலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்து மதத்தை திணிக்கும் வகையில் ஜெய்ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை நடத்தும் இந்துத்வா கும்பலின் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அது போன்ற தாக்குதல்களால் அப்பாவி மக்கள் தங்கள் உயிரையும் இழக்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த திங்களன்று (ஜூலை 29), உத்தர பிரதேச மாநிலத்தின் சந்தாலி மாவட்டத்தில் 15 வயதுடைய காலித் அன்சாரி என்ற சிறுவனை கடத்தி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட கட்டாயப்படுத்தியுள்ளது 4 பேர் கொண்ட இந்துத்வா கும்பல். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60% தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் "என்னை 4 பேர் கடத்தி ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி வற்புறுத்தினர். அதற்கு மறுத்ததால் என் மீது தீ வைத்தனர்" என போலிஸிடம் தெரிவித்துள்ளானர்
அதுவே அந்த சிறுவன் பேசிய கடைசி வார்த்தை. மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் முகமது காலித் உயிரிழந்தார்.
சிறுவனின் மரணம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பின் நடந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் மரணமடைந்ததை அடுத்து உடற் கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சிறுவனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட வழங்க மறுத்துள்ளது அந்த அரசு மருத்துவமனை நிர்வாகம். இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்தால் தன் மகனை இழந்த தந்தை, வேறு வழியின்றி, சிறுவனின் உடலை மினி லாரியில் எடுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது. இது தான் இந்நாட்டில் உங்கள் தலை விதி, என சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில் மோடி அரசும், காவி பயங்கரவாதிகளும் விடுத்துள்ள எச்சரிக்கையாக தான் இந்த சம்பவத்தை நாம் பார்க்க வேண்டி உள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.