அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்த மாணவி அகில இந்திய சித்த மருத்துவ நுழைவுத்தேர்வில் முதலிடம்



அகில இந்திய சித்த மருத்துவ நுழைவுத் தேர்வில் அறந்தாங்கி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்தவர் பொன்.கணேசன். விவசாயி. இவர் திமுக ஒன்றிய செயலாளர். இவரது மகள் பொன்மணி. பி.எஸ்.எம்.எஸ் படித்துள்ள அவர், சித்த மருத்துவ மேல் படிப்பிற்கான அகில இந்திய அளவிலான சித்தா மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினார்.

 நுழைவுத் தேர்வில் பொன்மணி 400க்கு 377 மதிப்பெண் பெற்று 99.83 தேர்ச்சி சதவீதம் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.

இதுபற்றி மாணவி பொன்மணி கூறுகையில், ‘‘முதுகலை படித்து கிராமபுற பகுதியில் பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பேன். சித்த மருத்துவ துறையில் ஆராய்ச்சி படிப்பில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன். எனது பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தான் உறுதுணையாக இருந்தனர்’’ என்றார். 

Post a Comment

0 Comments