புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களில் பொதுமக்களுக்கு உதவ தனி அலுவலர்...!புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களிலும், பொது மக்களுக்கு உரிய தகவல்களை வழங்கவும், மனுக்களை எழுதித் தரவும் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

மாவட்டத்தில் அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களிலும் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு  வெளிநபர்கள் கட்டணம் வசூலித்து எழுதித் தருவதைத் தடுத்து நிறுத்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு துறை ரீதியாக தகவல் அளிக்கும் பொருட்டும், அரசால் வழங்கப்படும் திட்டங்கள் தொடர்பாக விளக்கங்கள் அளிக்கவும் தனியாக அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இத்திட்டத்தை அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments