கோபாலப்பட்டினத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் காட்டுகுளம் தெரு…!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டானிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டினம் காட்டுக்குளம் பள்ளிவாசல் மதினா தெரு (காட்டுக்குளம் தெரு) ரேஷன் கடை முகப்பில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு மாதக்கணக்கில் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மதினா தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் ரேஷன் கடை வழியாகத்தான் காட்டுகுளம் பள்ளிவாசலுக்கு இரவு நேரங்களில் தொழுகைக்கு சென்று வருகின்றனர். மேலும் பெண்கள் குளத்திற்கு இரவு நேரங்களில் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் உள்ள மின்விளக்கு சில மாதங்களாகவே பழுதடைந்துள்ளது.

இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இருட்டாக இருப்பதால் நடந்து செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மழைக்காலம் வர இருப்பதால் இந்த பகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக வெளியே வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடியாக மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கோபாலப்பட்டினம் பகுதியில் வேறுஎங்கும் இதுபோன்று தெருவிளக்கு எரியாமல் இருந்தால் எங்களுக்கு புகைப்படம் மற்றும் எந்த தெரு என்று எங்கள் அதிகாரப்பூர்வ GPM MEDIA வாட்ஸ்ஆப் நம்பருக்கோ 82702 82723 அல்லது எங்களது GPM MEDIA வாட்ஸ்ஆப் குழும அட்மினுக்கோ அனுப்பி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் தீர்வு காணப்படும்.





Post a Comment

0 Comments