புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாட்டுக் கோழி வளர்க்க விண்ணப்பிக்கலாம்விலையில்லா அசில் இன நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்த செய்திக்குறிப்பு:

விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகளை வளர்ப்பதற்கு, ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 500 பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 6,500 பயனாளிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 696 பயனாளிகள்  என மொத்தம் 7,196 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பமுள்ளோர் வரும் ஆக. 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments