புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் நான்காம் ஆண்டு பதவி ஏற்பு விழா கடந்த 28-07-2019 அன்று மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜெ. முகமது யூசுப் அவர்கள் தலைவராகவும், அன்பரசன் அவர்கள் செயலாளரும், பட்டாபிராமன் அவர்கள் பொருளாளராகவும் பணியமர்த்தி ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜமீர் பாஷா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
முன்னாள் தலைவர் அபுபக்கர் வரவேற்புரையாற்றினார். தலைவர் முகமது யூசுப் பணி ஏற்புரையாற்றினார், துணை ஆளுநர் கராத்தே கண்ணையன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மீமிசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் என திரளாக கலந்துகொண்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திற்கு GPM MEDIA சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக செயலாளர் அன்பரசன் அவர்கள் நன்றி உரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : வாசிம் கான்

கோபாலபட்டினம் GPM மக்கள் மேடைக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்ட போது
கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் அவர்களுக்கு பணி நேர்மைக்கான விருது வழங்கப்பட்ட போது
மீமிசல் இளைஞர் நற்பணி மன்றத்திற்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்ட போது
அரசுப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்ட போது
இந்நிகழ்ச்சியில் மீமிசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் என திரளாக கலந்துகொண்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திற்கு GPM MEDIA சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக செயலாளர் அன்பரசன் அவர்கள் நன்றி உரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : வாசிம் கான்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.