அவசர கதியில் ஆராயாமல் எந்த செய்தியையும் பரப்பாதீர்.... அவசரம் சைத்தானின் செயல் - நபி (ஸல்)



அண்மை காலங்களில் தாய்குலங்கள் தன்னிலையை மறந்து, தவறான பாதையில் தவறிச் சென்று கொண்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இப்படியான சூழ்நிலைகளில், இதற்கான தீர்வை அல்லது விழிப்புணர்வை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்.
ஆனால் மாறாக, மாற்றாக, ஆதாரமற்ற, அனுமதியற்ற செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப முற்படுகிறோம். இதனால் என்ன நன்மை?

வதந்திகளை பரப்பாமலும், நம்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும். நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு. வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவரே பொறுப்பு.

எதைப் பற்றி உமக்கு (தீர்க்க) ஞானமில்லையோ, அதை (செய்ய) தொடர வேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிபுலனும், பார்வையும், இருதயமும்  இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும் - திருகுர்ஆன் 17:36).

நிதானம் இறைவனின் செயல், அவசரம் சைத்தானின் செயல் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஆகவே இனிவரும் காலங்களில் அவசியமற்றதை தவிர்த்து, அரோக்கியமானதை நோக்கி, பயணிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆக்கம்...,
ஆஸிக் இக்பால்,
அரசநகரிப்பட்டினம்.

Post a Comment

0 Comments