தொண்டி வழியாக கன்னியாகுமரிக்கு ரெயில் இயக்க வேண்டும் எம்.பி.யிடம் பொதுமக்கள் மனுராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வட்டார சேவை அறக்கட்டளை மற்றும் தொண்டு மக்கள் நல வளர்ச்சி சங்கம் சார்பில் தொண்டி வழியாக கன்னியாகுமரிக்கு ரெயில் சேவை தொடங்க எம்.பி.யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி வழியாக சாலைப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்கள் அதிக அளவில் நடைப்பெறுகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் நீண்ட தூர பயணத்திற்கு சாலைப் போக்குவரத்தை விட ரெயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம்,தொண்டி வழியாக கண்ணியாகுமரிக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க இந்தப்பகுதி பொதுமக்கள் சார்பில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட அரசு போக்குவரத்து பணிமனையை தொண்டியில் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் மனு அளிக்கப்பட்டது.இதில் பாய்ஸ் அகமது, முன்னாள் வங்கி அதிகாரி நாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments