மணமேல்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்..!!தேசிய பிரச்சாரத்தின் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் நேற்று 24.08.2019 சனிக்கிழமை சுஸ்மிதா மஹாலில் அச்சமற்ற வாழ்வே கன்னியமான வாழ்வு என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்கள் தலைமை தாங்கினார். SDPI கட்சியின் மாவட்ட தலலவர் சகோ.சாலிஹ் மரைக்காயர் அவர்களுடைய முன்னிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் சகோதரர். SRM சர்புதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா வின் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஆபிருதீன் மன்பயி சிறப்புரை ஆற்றினார்கள்.

இதில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக நன்றியுரை மாவட்ட செயலாளர் ஹசனுதீன் நிகழ்த்தினார்.

தகவல்: செய்து இப்ராஹிம், கோட்டைப்பட்டிணம்
Post a Comment

0 Comments