சவுதி ரியாத் பத்தாஹ்வில் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம்சவுதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் பத்தாஹ் கிளை நடத்திய மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 23.08.2019 வெள்ளிக்கிழமை ஜும்ஆ-விற்கு பிறகு   மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் நாமக்கல் தாஜ்தீன் அவர்கள் தலைமை தாங்க , மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டம் மெளலவி அசார் ஹாபிஷா அவர்கள் கிராத் ஓத, கிளை தமுமுக செயலாளர் R.புதுப்பட்டிணம் அபுதாஹிர் அவர்கள் வரவேற்புரையாற்ற, இனிதே துவங்கியது. அதனைத் தொடர்ந்து  கிளை பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் ஹாஜிகளுக்கு சேவை செய்த அனுபவங்களை உறுப்பினர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள, மெளலவி அசன் பிர்தெளசி அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள கட்டுகோப்புகள் குறித்து மார்க்க உரையாற்றினார்.

தொடர்ந்து கிளை பொறுப்பாளரும் மண்டல பொருளாளருமான சீர்காழி ஜர்ஜீஸ் அஹமது அவர்கள் இன்றைய காலகட்டத்தில் தமுமுக வின் தேவை பற்றி எடுத்துரைக்க , மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட்  25 அன்று சென்னை, திருச்சி, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ள மத்திய அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிரான  தமுமுக வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதை அனைவர்களின் மத்தியிலும் எடுத்துரைத்தார்.

இறுதியாக கிளை மமக துணைச் செயலாளர் மீமிசல் உமர்தீன் அவர்கள் நன்றியுரையாற்ற, துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

இக்கூட்டத்தில் கோபாலப்பட்டினம் சகோதரர் அகமது பாதுஷா அவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தகவல்:
தமிழ் தஃவா தமுமுக - மமக
ஊடகப்பிரிவு 
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

Post a comment

0 Comments