வெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் குவைத் அரசு செய்த மாற்றம்...!!!குவைத்தில் வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் செய்து குவைத் ஆரோக்கிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உள் நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகப் படுத்தும் வகையில் பல துறைகளில் வெளிநாட்டினருக்கு புதிய விசா வழங்க குவைத் அரசு தடை விதித்திருந்தது. அதில் மருத்துவத் துறை முக்கியத்துவம் வாய்நதாகும்.

மருத்துவத்துறையில் உள்ள இடங்களை உள் நாட்டில் உள்ளவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் உள் நாட்டில் உள்ளவர்களுக்கு இத்துறையில் பணிபுரிய பயிற்சி தேவை என்பதால் மருத்துவத் துறையில்  வெளிநாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று குவைத் அரசுக்கு மருத்துத்துறையில் உள்ளவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று மருத்துவத் துறைக்கு வெளி நாட்டினருக்கு விசா வழங்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments