மீமிசல் அஞ்சலகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேச தெரியாத அஞ்சலக அலுவலர்! மீமிசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திண்டாட்டம்!!



மீமிசல் அஞ்சலக அலுவலருக்கு தமிழில் எழுதப், படிக்க, பேச, தெரியாததால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அறந்தாங்கி அடுத்த மீமிசலில் துணை அஞ்சலகம் உள்ளது. இந்த துணை அஞ்சலகத்தின் கீழ் அரசநகரிப்பட்டினம், கானாடு, முத்துக்குடா, பொய்யாதநல்லூர், தாழனூர் ஆகிய கிளை அஞ்சலகங்கள் உள்ளன.

மீமிசல், கோபாலபட்டினம், R.புதுப்பட்டிணம், SP மடம்,  கொளுவனூர், காரியம்வயல், கீழையூர், அத்திவயல், பில்லுவலசை, நரியேந்தல், புரசக்குடி, மாரமங்கலம், ஏம்பக்கோட்டை, குமரப்பன்வயல், செய்யானம், கீழஏம்பல், வன்னாங்கோட்டை, பாலக்குடி, ஆலத்தூர் என மொத்தம் 19 கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டு வரும் மீமிசல் அஞ்சலகத்தில் அஞ்சலக அலுவலர் மட்டுமே பணியில் உள்ளார். அஞ்சலக உதவியாளர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. இதில் அஞ்சலக அலுவலர் பணிக்கு அரவிந்த் குமார் (பீகாரை சேர்ந்தவர்) 21/06/19 அன்று முதல் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த துணை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும், தபால்தலை வாங்குவதற்கும், பதிவு மற்றும் விரைவு அஞ்சல் அனுப்புவதற்கும் வந்து செல்லக்கூடிய கிராமப்புற மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அஞ்சலக அலுவலருக்கு தமிழில் எழுதப் படிக்க பேச தெரியாததால் கிராமப்புற மக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அஞ்சலக அலுவலருக்கு தமிழில் எழுத, படிக்க, பேசத் தெரியாததால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது பணிகளை முடிக்க முடியாமல் கிராம மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

எனவே கிராமப்புற மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த துணை அஞ்சலகத்தில் தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்த அஞ்சல் அலுவலகர் ஒருவரை நியமிக்க வேண்டும். மேலும் நீண்ட காலமாக காலியாக உள்ள துணை அஞ்சலக உதவியாளர் மற்றும் எழுத்தாளர் (Clerk) பணியிடத்தை உடனடியாக நிரப்பி அந்த பணியிடத்திற்கு தமிழில் எழுதப், படிக்க, பேசத் தெரிந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆதார் பதிவு வசதி இல்லை:

கடந்த சில மாதங்களுக்கு முன் மீமிசல் துணை அஞ்சலகத்தில் ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான புதிய வசதி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது இங்கு ஆதார் கைரேகை பதிவு செய்யக்கூடிய இயந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது. ஆகையால் இங்கு ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான வசதி தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆவுடையார்கோவில் சென்று ஆதார் கார்டு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதை விரைந்து செயல்படுத்த இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0 Comments