புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு, அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு, அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று, அரசின் மானியமாக 25 சதவிகிதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் பெறலாம்.

மேலும் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவிகித வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், தயாரிப்பு சார்ந்த தொழில் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு வங்கி மூலம் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம்.

கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பதுடன் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐடிஐ இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருப்பதுடன், பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க  w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.i‌n/‌n‌e‌e‌d‌s  என்ற என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் உரிய இணைப்புகளுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தயாரிப்பு சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சமும், 25 சதவிகித மானியத்துடன் வங்கியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி உடையவராகவும், 18 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க   ‌w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌u‌y‌e‌g‌p என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் உரிய இணைப்புகளுடன் மாவட்ட தொழில் மையத்துக்கு அனுப்ப வேண்டும்.

Post a Comment

0 Comments