புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ஆம் தேதி பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம்புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 10-ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10ம்தேதி புதுக்கோட்டை தாலுகா மணவிடுதி, ஆலங்குடி தாலுகா குப்பக்குடி, திருமயம் தாலுகா பேரையூர், குளத்தூர் தாலுகா புலியூர், இலுப்பூர் தாலுகா தாயினிப்பட்டி, கந்தர்வகோட்டை தாலுகா வடுகப்பட்டி, அறந்தாங்கி தாலுகா பரவாக்கோட்டை, ஆவுடையார்கோவில் தாலுகா வெளிவயல், மணமேல்குடி தாலுகா பெருமருதூர், பொன்னமராவதி தாலுகா மரவாமதுரை, கறம்பக்குடி தாலுகா கருப்பட்டிப்பட்டி, விராலிமலை தாலுகா விராலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments