கோட்டைப்பட்டினத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில்  பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைகுட்பட்டகோட்டைப்பட்டினம் பகுதியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

நிலநடுக்கம், சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மின்னல், இடி, மற்றும் தீ விபத்துக்கள் போன்ற பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால்  ஏற்படும் தீமைகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் விதம், பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல், மற்றும் எதிர்கொள்ள  மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல், தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற பல்வேறு வகையான ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டன.

அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகர், வட்டாட்சியர்கள் பா.சூரியபிரபு,  ஜமுனா, கோட்டைப்பட்டிணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கடலோரப் பாதுகாப்புக்  குழும உதவி ஆய்வாளர்கள்  ரகுபதி, ஜவஹர், ராஜ்குமார் உள்ளிட்டோர் ஒத்திகையில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments