ஜெகதாப்பட்டினத்தில் கடல் உள்வாங்கியுள்ள நிலையில், மீன்பிடி தளத்தில் உள்ள மணல் திட்டை அகற்றி ஆழப்படுத்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் மீன்பிடித்து திரும்பும்போது, விசைப்படகுகளை கரையில் கட்டி வைப்பது வழக்கம்.
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் காரணமாக ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு, அந்த இடம் மேடாக மாறியது. மேலும் கடல் சில சமயங்களில் உள்வாங்குகிறது. இதனால் மணல் திட்டாக காட்சியளிக்கும் நிலையில், மீன்பிடிக்க செல்வதற்காக கரையில் நிறுத்தப் பட்டுள்ள விசைப்படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மணல் திட்டு இருப்பதால், கடலில் இருந்து கரைக்கு திரும்பும்போது பிடித்து வரும் மீன்களை நேரடியாக மீன்பிடி தளத்திற்கு கொண்டு வர முடிவதில்லை. இதனால் நாட்டுப்படகு மூலம் விசைப்படகு இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து மீன்களை நாட்டுப்படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கடல் சிறிது உள்வாங்கியது. இதனால் அப்பகுதி மணல் திட்டாக காட்சியளிக்கிறது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) எவ்வாறு கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என்று தெரியாமல் மீனவர்கள் திகைத்து போய் உள்ளனர்.
மணல் திட்டை அகற்ற பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மணல் திட்டை அகற்றி, அந்த பகுதியை ஆழப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.