பள்ளி தலைமை ஆசிரியர்கள் போட்டி தேர்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலெட்சுமி பேசினார்.
மாணவர்கள் வருகை பதிவினை தினசரி காலை முதற்பாட வேளை, மதியம் முதற்பாட வேளை ஆகிய நேரங்களில் டி.என். செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் தொடர்பாக குறுந்தகவல் செய்தி அனுப்ப வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவு அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் வருகை நேரத்தை சரியாக தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கண்காணிக்க வேண்டும்.
சிறப்பு வகுப்புகள்
ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் முன்னேற்பாடாக நாள் திட்டத்தினையும், வருடாந்திர திட்டத்தினையும் வகுத்து கொள்ள வேண்டும். உங்களது பள்ளியில் சிறப்பாக பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும், சிறப்பாக படிக்கும் மாணவர்களையும், சிறந்த பள்ளியாக செயல்படுகிறதா என்பதனையும் தலைமை ஆசிரியர்களாகிய நீங்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும். ஆசிரியர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் காலை, மாலை சிறப்பு வகுப்புகளை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.
நகர்வு பதிவேட்டினை பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடத்திட்டத்தினை முறையாக எழுதி உள்ளார்களா என்பதனையும், கற்பித்தல் துணை கருவிகளோடு சென்று பாடம் கற்பிக்கிறார்களா என்பதனையும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நூலகத்தில் புத்தக பயன்பாட்டினை உறுதி செய்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் போட்டி தேர்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது பகுதி எல்லைக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உங்களது பள்ளியில் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் சேர்ந்து வாசிக்க தெரியாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும்.
100 சதவீத தேர்ச்சி
துப்புரவு பணியாளர்களை கொண்டு கழிப்பறையினையும், பள்ளி வளாகத்தினையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலைப் பயணம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மின்னஞ்சல், வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படும் தகவல்களை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் முன்மாதிரியாக தலைமைத்துவ பண்புடன் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பான வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற பாடுபட வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் 5 இடங்களுக்குள் வர அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள், தேர்வு திட்ட அமைப்பாளர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி இடம் தொடர்பான விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் வருகை பதிவினை தினசரி காலை முதற்பாட வேளை, மதியம் முதற்பாட வேளை ஆகிய நேரங்களில் டி.என். செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் தொடர்பாக குறுந்தகவல் செய்தி அனுப்ப வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவு அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் வருகை நேரத்தை சரியாக தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கண்காணிக்க வேண்டும்.
சிறப்பு வகுப்புகள்
ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் முன்னேற்பாடாக நாள் திட்டத்தினையும், வருடாந்திர திட்டத்தினையும் வகுத்து கொள்ள வேண்டும். உங்களது பள்ளியில் சிறப்பாக பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும், சிறப்பாக படிக்கும் மாணவர்களையும், சிறந்த பள்ளியாக செயல்படுகிறதா என்பதனையும் தலைமை ஆசிரியர்களாகிய நீங்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும். ஆசிரியர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் காலை, மாலை சிறப்பு வகுப்புகளை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.
நகர்வு பதிவேட்டினை பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடத்திட்டத்தினை முறையாக எழுதி உள்ளார்களா என்பதனையும், கற்பித்தல் துணை கருவிகளோடு சென்று பாடம் கற்பிக்கிறார்களா என்பதனையும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நூலகத்தில் புத்தக பயன்பாட்டினை உறுதி செய்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் போட்டி தேர்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது பகுதி எல்லைக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உங்களது பள்ளியில் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் சேர்ந்து வாசிக்க தெரியாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும்.
100 சதவீத தேர்ச்சி
துப்புரவு பணியாளர்களை கொண்டு கழிப்பறையினையும், பள்ளி வளாகத்தினையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலைப் பயணம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மின்னஞ்சல், வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படும் தகவல்களை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் முன்மாதிரியாக தலைமைத்துவ பண்புடன் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பான வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற பாடுபட வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் 5 இடங்களுக்குள் வர அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள், தேர்வு திட்ட அமைப்பாளர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.