குஜராத்தில் 'ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல மறுத்த மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்!



ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர்கள் 3 பேர், சரமாரியாகத் தாக்கப்பட்டனர். குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த மெக்கானிக் கடை வைத்திருக்கும் சித்திக் பகத் என்பவர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் இதைத் தெரிவித்துள்ளார்.

பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் தனது மகன் சமீர் (17), சல்மான் கீதேலி, சோஹைல் பகத் ஆகியோர் மோட்டர் பைக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த 6 பேர், இவர்களை நிறுத்தி, ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போடும்படி கூறினார்கள். மறுத்ததால், பைக் செயின் மற்றும் பயங்கரமான ஆயுதங்களால் மண்டையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் இந்த பகுதியில் உங்களைப் பார்த்தால் கொன்று விடு வோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர். படுகாயம் அடைந்து கிடந்த அவர்களை அந்தப் பகுதியினர் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் புகாரில் தெரிவித்துள் ளார்.

இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள கோத்ரா போலீசார், ‘’பாதிக்கப்பட்டவர்கள், பேசும் நிலையில் இப்போது இல்லாததால் மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் சிசிடிவி காட்சிகளை பார்த்து 5 பேரை கைதுசெய்துள்ளோம். ஒருவரை தேடி வருகிறோம். அனைவரும் 17 வயதில் இருந்து 23 வயதுக்குள்ளவர்கள்’’ என்று தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக, ஜெய் ஸ்ரீராம் சொல்லாதவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments