"குழந்தை ஆரோக்கியமாக வளர தாய்ப்பால் அவசியம்'



குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பால் புகட்டுவது அவசியம் என்றார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவுக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்துக்கு அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறொன்றும் கொடுக்கக் கூடாது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை இணை உணவுடன் சேர்த்து தாய்ப்பால் புகட்டலாம்.



  • தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.
  • வயிற்றுப்போக்கு ஏற்படாது. 
  • நுரையீரல் பாதிப்பு குறைவாக இருக்கும். 
  • தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் ரத்தப் போக்கு கட்டுப்படும். 
  • மார்பகப் புற்றுநோய் வராது. 

எனவே, குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை உறுதி செய்ய மருத்துவர்களுடன் குடும்பத்திலுள்ள பெரியார்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மீனாட்சிசுந்தரம்.

விழாவில் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் பீட்டர், குழந்தைகள் நலத்துறைத் தலைவர் வைரமணி, துணைக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், துணை முதல்வர் சுமதி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆரோக்கியக் குழந்தைகள் போட்டியில் வென்ற குழந்தைகளுக்கும், தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments