கஞ்சா வியாபாரியின் குடும்பத்திற்கே, 'குண்டாஸ்'கஞ்சா வியாபாரிகள் மூவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (68). அவரது மனைவி சித்ரா (58), மைத்துனர் செல்வம் (40).  இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த போது திருக்கோகர்ணம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது திருச்சி மத்திய சிறையில் இவர்கள் மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில், இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

 இதன்பேரில் ரத்தினம், சித்ரா, செல்வம் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments