புதுக்கோட்டையில் தொடரும் திருட்டு; அச்சத்தில் மக்கள்



புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக 15 இடங்களுக்கே மேல் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். போலீசாரின் மெத்தனபோக்கால் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர்.

இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளது. இதில் 7 சப்டிவிசன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சப்டிவிசன்களுக்கும் ஒரு டிஎஸ்பி அலுவலகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் 15 இடங்களுக்கு மேல் திருட்டு சம்பவங்ள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவசாலில் அண்ணன் தம்பி வீட்டில் ஒரு நேரத்தில் வீட்டை உடைந்து வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

இதபோல் தம்பி வீட்டில் புகுந்து பெண்ணின் தாலி செஜயினை திருடி சென்றனர். இதே போல் ஆலங்குடி சப் டிவிசன் பகுதியில் மொய் விருந்து நடந்த வீட்டில் புகுந்து திருடும் முயற்சி நடைபெற்றது. இதபோல் புதுக்கோட்டை நகர் பகுதியில் செல்போன் கடையில் திருட்டு, பெண்ணை போலீஸ்போல் நடித்து ஏமாற்றி திருட்டு , திருக்கோகர்ணம் பகுதியில் வீட்டில் திருட்டு, புதுக்கோட்டை நகர் பகுதியில் கோவில் குருக்கல் வீட்டில் திருட்டு, பேருந்து நிலையம் வந்த பெண்ணிடம் திருட்டு ,பொன்னமாரவதி பகுதியில் திருட்டு என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை போலீசார் ஒரு திருட்டு குற்றவாலிகளை கைது செய்யவில்லை.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். ஏன் போலீசார் இதுவரை குற்றவாலிகளை கைது செய்யவில்லை என்று தெரியவில்லை. இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணி செய்வதில் மெமத்தனம் காட்டுவதால் நடக்கிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக முன்பெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெறும். தற்போது கிராமங்களில் திருட்டு சமபவங்கள் அறங்கேற்கிறது.

இதற்கு முக்கிய காரணம் போலீசார் மெத்தனம் காட்டுவதால்தான் இது அறங்கேற்கிறது என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இரவு நேர ரோந்து போலீசார் தங்களுக்கு வழங்கிய வாகனங்களை வைத்து கொண்டு ரோந்து செல்லாமல் ஒரு இடத்தில் இருந்து கொண்டு ரோந்து செல்வதுபோல் மைக்கில்(வாக்கிடாக்கி) உயர் அதிகாரிகளுக்கு தகல் தெரிவித்து தப்பித்துவிடுகின்றனர். போலீசாரின் மெத்தன்ததை பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். இதற்கு போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய நகர் புறத்தில் இரவு நேரத்தில் போலீசார் முன்பு போல் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் திருடர்கள் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருட்டு சம்வங்களை அரங்கேற்றி வருகினறனர். நாங்கள் இழப்பது எங்களின் வாழ்வாதாரத்தை என்பதை போலீசார் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொரு திருட்டையும் சம்பவங்களாக புரிந்துகொள்ளாமல் விபத்துபோல் எடுத்துக்கொள்கின்றனர்.

திருட்டை போலீசார்தான் கண்டுபிடிக்க வேண்டும். மற்றவர்கள் அதனை செய்ய முடியாது. ஆனால் புதுக்கோட்டை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக நடந்த திருட்டு சம்பவங்களில் ஒரு குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. இதனால் திருடர்கள் துணிச்சலுடன் தொடர்ந்து திருட்டு சம்பவங்களை நிகழ்த்திவருகின்றனர். இதனால் நாங்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலையில் உள்ளோம் என்றனர்.

மாற்றுப்பணிக்கு ரோந்து வாகனங்கள்

மாவட்ட போலீசாருக்கு வழங்கப்பட்ட சில இரவு ரோந்து இரு சக்கர வாகனங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் வேறு பணிக்கு பயன்படுத்துப்பட்டு வருதால் இரவு ரோந்து பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்டடுள்ளது. இதனால் இரவு ரோந்து செல்லும் போலீசார் சொந்த பைக்கில் அவர்களின் பணம் செலவு செய்து செல்வதால் முழுமையாக அவர்கள் பணிக்கு செல்வதில்லை என்று சில போலீசார் முணுமுணுக்கின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் திருட்டு சம்பவத்தை தடுக்க அந்ததந்த போலீஸ் ஸ்டேசன்களுக்குட்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் திருட்டை குறைக்க முடியும். மேலும் நகரின் முக்கிய வீதிகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரைமுக்கு தனி போலீஸ் ஸ்டேசன் இல்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிரைமுக்கு தனியாக போலீஸ் ஸ்டேசன் இல்லை. அனைத்து ஸ்டேசன்களும் சட்டம் ஒழுங்கு ஸ்டேசன்களாக இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் போலீசார் அனைவரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை மட்டும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். திருட்டு போன்ற கிரைம்களை ஒரு விபத்துபோலத்தான். இதனால் குற்றவாளிகளை கைது செய்வதில் மெத்தனத்துடன் தாமதம் ஏற்பட்டுள்ளது. இனியாவது கிரைமுக்கு தனியாக குறைந்தது மாவட்டத்திற்கு ஒரு போலீஸ் ஸ்டேசனாவது உருவாக்க வேண்டும். அப்போதுதான் தொடர் திருட்டு சம்பவத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய முடியும்.

Source: தினகரன்

Post a Comment

0 Comments